உள்ளூர் செய்திகள்

பாரதி அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர் தேர்வில் அசத்தல்

எருமப்பட்டி: பாரதி அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, சி.பி.எஸ்.இ., தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாமக்கல், ரெட்டிப்பட்டியில் பாரதி அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.இதில், மாணவி இசானா, 500க்கு, 489 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதே போல், வர்ஷா, 483 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம், கோபிகா, ஸ்ரீநிதி ஆகிய மாணவியர், 473 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.அவர்களை, பள்ளி தாளாளர் ராமசாமி, செயலாளர் சாரதாமணி மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும், பாரதி அகாடமி பள்ளியில் ஸ்பெக்ட்ரா நிறுவனம் மூலம், 'நீட்', ஜே.இ.இ., பயிற்சிகளும் நடத்தப்படுகிறது. பவுண்டேஷன் பயிற்சி, 6ம் வகுப்பில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்