உள்ளூர் செய்திகள்

ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ., பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) பொறுப்பில் இருந்து டிம் குக் விலகுகிறார்.உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிப்பது அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம். கடந்த 2011ம் ஆண்டு, அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகினார். இதன் பிறகு அந்த பதவியில் டிம் குக் நியமிக்கப்பட்டார்.15 ஆண்டுகள் டிம் குக், சி.இ.ஓ., ஆக இருந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலர் ஆக உயர்ந்தது. பங்கு மதிப்பும், 25 மடங்கு அதிகரித்து உள்ளது. அவர் பதவி ஏற்ற போது ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 13 டாலர் ஆக விற்பனை ஆனது. தற்போது இது 2,359.2 மடங்கு அதிகரித்து 319.70 டாலர் ஆக விற்பனை ஆகி வருகிறது. அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2011ல் 108 அமெரிக்க டாலர் ஆக இருந்த நிலையில் தற்போது 400 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது.அவரது பதவிக்காலத்தில் உடல்நிலை, உடற்தகுதி உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் ஆப்பிள் வாட்ச் 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு ஏர்பாட்கள், விஷன் புரோ உள்ளிட்ட புதிய சாதனங்களையும் ஆப்பிள் மியூசிக், ஐ கிளவுட் உள்ளிட்ட சேவைகளையும் டிம் குக் அறிமுகம் செய்தார்.இந்நிலையில், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகி உள்ளார். அவருக்கு பதில் ஜான் டர்னஸ் புதிய சி.இ.ஓ., ஆக பொறுப்பு ஏற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்