உள்ளூர் செய்திகள்

டைம்ஸ் தரவரிசையில் ஸ்ரீ சாய்ராம் குழுமப் பொறியியல் கல்லூரிகள் 2ஆவது இடம்

சென்னை: டைம்ஸ் தரவரிசையில் ஸ்ரீ சாய்ராம் குழுமப் பொறியியல் கல்லூரிகள் தமிழக அளவில் 2ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறுகையில், பிரிட்டன் டைம்ஸ் நிறுவனம் கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை தரவரிசைப்படுத்தி வருகிறது. அதில் கல்வி தரவரிசையில் தமிழக அளவில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி 2 ஆவது இடம், தேசிய அளவில் 13ஆவது இடம் உலக அளவில் 66 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.மற்றொரு கல்வி நிறுவனமான ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரி தரமான கல்விக்கான தரவரிசையில் தமிழக அளவில் 2ஆவது இடம், தேசிய அளவில் 17 ஆவது இடம் மற்றும் உலக அளவில் 70 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது, என்றார்.ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிகள் முதல்வர்கள் ராசா பழனிக்குமார், வணிக மேலாண் கல்லூரி இயக்குநர் மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்