எதிர்காலத்தின் திசைகாட்டியாக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: புதுச்சேரியில் ஏப்., 4, 5ல் கண்காட்சியுடன் நடக்கிறது
புதுச்சேரி: மாணவர்களின் எதிர்காலத்திற்கு திசைகாட்டியாக இருக்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, வரும் 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது.எக்ஸாம் முடிஞ்சாச்சு... அடுத்து என்ன படிக்கலாம்? - இது மாணவர்களை விட பெற்றோர்களுக்கே அதிக கவலையைத் தரும் கேள்வி. உங்களின் எல்லா குழப்பங்களுக்கும் 'புல் ஸ்டாப்' வைக்க, சூப்பர் வாய்ப்பாக தினமலர் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியான கல்வித் திருவிழா, வரும் ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 100 அடி சாலையில் மரப்பாலம் சிக்னல் அருகிலுள்ள சுகன்யா அரங்கில் இருநாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முழுமையான கல்வி தகவல்களை வழங்கும் ஒருங்கிணைந்த மேடையாக அமைய உள்ளது.தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனங்கள் தங்கள் ஸ்டால்களை அமைத்து, மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்கும் வகையில் இந்த கல்வி விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.கல்வி ஆலோசகர்கள், துறை நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் குறித்து சரியான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள், வளர்ச்சியடைந்து வரும் துறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளது. உயர்கல்வி சேர்க்கை நடைமுறை பற்றிய தெளிவும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும்.நுழைவுத் தேர்வுகள் எப்படி எழுத வேண்டும், எந்த துறைக்கு எந்த தேர்வு அவசியம், சேர்க்கை நடைமுறைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதுடன், உதவித்தொகை வாய்ப்புகள் பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.சிவில் சர்வீசஸ் முதல் செயற்கை நுண்ணறிவு வரை பல்வேறு துறைகள் குறித்து நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர். குறிப்பாக, எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு அறிவியல், தகவல் பாதுகாப்பு போன்ற துறைகளில் முன்னேறுவதற்கான வழிகள் எடுத்துரைக்கப்படும். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொடக்க நிறுவன வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் வழங்கப்படுகின்றன.மேலும், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் பற்றிய முழுமையான விளக்கமும் வழங்கப்படும்.உயர்தர கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. மாணவர்களும் பெற்றோர்களும் நேரடியாக கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களுக்கு பதில் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களும் பெற்றோர்களும் இலவசமாக பங்கேற்கலாம்.அறிவுக்கும் பரிசு... ஆர்வத்துக்கும் பரிசுவெறுமனே கேட்டுவிட்டு மட்டும் போனால் போதுமா? அங்கு நடக்கும் கருத்தரங்குகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் காத்திருக்கின்றன.உங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்பு எது என்பதைத் தீர்மானிக்க இதுவே சரியான தருணம். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளின் கனவுப் பயணத்திற்கு இந்த கல்வி திருவிழா ஒரு நல்ல தொடக்கமாக அமையும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. ஏப்ரல் 4, 5 தேதிகளில் சுகன்யா அரங்கில் சந்திப்போம்.இணைந்து வழங்குவோர்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ருசி பால் நிறுவனம், ஆகியவை இணைந்து வழங்குகின்றன.இலவச முன்பதிவிற்குதினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்க கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து அல்லது 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம்.ஸ்டால் புக்கிங்தினமலர் வழிகாட்டி ஸ்டால்புக்கிங்கிற்கு 98940 09059; 99449 63834 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.