கலைக் கல்லூரியில் நடந்த உயிரியல் அறம் பற்றிய கருத்தரங்கில் 57 ஆராய்ச்சிக் கட்டுரைகள்!
கடலூர்: கடலூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த உயிரியல் அறம் பற்றிய கருத்தரங்கில் 57 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கவும், அவற்றை மேம்படுத்தவும் நிதி உதவி செய்து வருகிறது. அதன்படி கல்லூரிகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் முதுகலை தாவரவியல் ஆராய்ச்சி பிரிவு சார்பில், உயிரியல் அறம் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில், பெங்களூருவைச் சேர்ந்த இயற்கை வளம் மற்றும் உலக பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் ரவிக்குமார், புதுச்சேரி ஆயுர்வேத அரசுக் கல்லூரி முதல்வர் கோபால் சிறப்புரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர். 30 ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர் பங்கேற்றனர். இரண்டு நாள் 8 அமர்வுகளாக கருத்தரங்கம் நடத்தப்பட்டு, 57 பேர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பித்தனர். ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்குப் பின்னர் டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத் திற்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்பி வைக்கப்படும்.