விடுதி உணவில் புழு: சாப்பிடாமல் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
காட்டுமன்னார்கோவில் : மதிய உணவில், புழு இருந்ததால், விடுதி மாணவர்கள் உணவைச் சாப்பிடாமல், பள்ளிக்குச் சென்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இங்கு, நேற்று மதியம், இரண்டு மாணவர்கள் சாப்பிட்ட உணவில் புழு இருந்தது. இதனால், மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, மதிய உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்குச் சென்றனர். ஏற்கனவே இரவில் முறையான டிபன் வழங்குவதில்லை என, மாணவர்களிடையே புகார் உள்ளது. இந்த நிலையில், மதிய உணவில் புழு இருந்ததால் விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வார்டன் தயாளன், பள்ளியில் இடைவேளை நேரமான, 3:00 மணிக்கு, உணவு வழங்கினார்.