உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத்பிரிட்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி வரவேற்றார். 74 பள்ளிகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 14, 17, 19 வயது பிரிவுகளின் அடிப்படையில் தனித்தனியாக போட்டிகள் நடந்தன. கபடி, கோ-கோ, வாலிபால், கூடைப்பந்து, இறகுபந்து, மேஜை பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இறகு பந்து போட்டியில் வென்றவர்கள் 14 வயது பிரிவு (தனிநபர்): முதலிடம் அகாஷி செரீன், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி. (இருநபர்) இதே பள்ளியை சேர்ந்த தமிழ்செல்வன், அகாஷிசெரீன், 17 வயது பிரிவு(தனிநபர்): முதலிடம் சபரிஜெனத், இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி. 19 வயது பிரிவு (தனிநபர்): முதலிடம் ஆலம்தார் உசேன்கான், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, கோ-கோ போட்டி 14 வயது பிரிவு: நாடார் மகாஜன சபை பள்ளி, மேதலோடை முதலிடம். புனித ஜோசப்பள்ளி, முத்துப்பேட்டை இரண்டாமிடம். ஹையரத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை மூன்றாமிடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்