மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம், தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது. மாநில பொருளாளர் ஜம்பு, மாவட்ட செயலர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,500 ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.