உள்ளூர் செய்திகள்

எஸ்.ஆர்.எம்., குழும கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு

சென்னை: எஸ்.ஆர்.எம்., குழும கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஆன்லைன் வழி நுழைவுத்தேர்வு, வரும் ஏப்., 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. பல்கலை அறிவிப்பு: எஸ்.ஆர்.எம்., குழும கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்களும், நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் நிரப்பப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்கான ஆன்லைன் வழி நுழைவுத் தேர்வு, ஏப்., 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கும். எழுத்து தேர்வு வகையிலான நுழைவுத்தேர்வு ஏப்., 26ம் தேதி நடக்கும். நாடு முழுவதும், 100 நகரங்களில் நுழைவுத்தேர்வு நடக்கும். இதில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல்கலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்