உள்ளூர் செய்திகள்

மாநில அளவில் முதலிடம் பிடித்த காரைக்குடி கிளை நூலகம்

காரைக்குடி: அதிக எண்ணிக்கையில் புரவலர்களை சேர்த்ததற்காக காரைக்குடி கிளை நூலகம் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளது. பொது நூலக துறை சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவில் சிறந்து விளங்கும் நூலகங்களுக்கு விருது வழங்குவது வழக்கம். மாநில அளவில் 4,048 நூலகங்கள் உள்ளன. இதில், காரைக்குடி கிளை நூலகம் அதிக எண்ணிக்கையில் புரவலர்களை சேர்த்ததில் மாநில அளவில் முதலிடம் பிடித்து விருது பெற்றுள்ளது. காரைக்குடி கிளை நூலகத்தில் 42,500 புத்தகங்கள், 14 நாளிதழ்கள், 80 பருவ இதழ்கள் உள்ளன. உறுப்பினர்களாக 6,416 பேர்கள் உள்ளனர். தினமும் வாசகர்கள் 200 க்கும் மேல் வந்து செல்கின்றனர். இதில், 185 பேர் நூல்களை பெற்று செல்கின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நூலகங்களில் புரவலர் சேர்ப்பு பணி நடந்தது. இதன்படி 148 புரவலர்களும், 4 பெரும் புலவர்களும் இங்கு சேர்ந்துள்ளனர். மாநகராட்சி நூலகங்களை பின்னுக்கு தள்ளி இந்நூலகம் விருது பெற்றுள்ளது. சிறந்த வாசகர் வட்ட விருதை சென்னை, கரூர், திருவண்ணாமலை நூலகங்களும், அதிக உறுப்பினர்கள் சேர்க்கை பெற்றதாக சென்னை உட்பட 10 மாவட்ட நூலகங்கள் இடம் பெற்றுள்ளன. காரைக்குடி நூலகர் லலிதா கூறுகையில், “விருது பெற்றது பெருமை அளிக்கிறது. இதற்கு ஒத்துழைத்த காரைக்குடிபுரவலர்கள், நூலக உறுப்பினர்களுக்கு நன்றி. நூலக வாரவிழாவையொட்டி 10 பேர் புரவலர்களாக சேர்ந்துள்ளனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்