மாநில வாள் சண்டை போட்டிக்கு பரமக்குடி மாணவிகள் தேர்வு
பரமக்குடி: சேலத்தில் நடக்கவுள்ள மாநில அளவிலான வாள் சண்டை போட்டிக்கு, பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வாகியுள்ளனர். ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேமோரியல் பள்ளியில், மண்டல அளவிலான வாள் சண்டை போட்டிகள் நடந்தன. இதில் பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தேவகோட்டை, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட 7 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 750 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் லீலாவதி, சத்தியபிரியா, பாண்டீஸ்வரி ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்கள் சேலத்தில் நடக்கவுள்ள மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.