தர்பூசணியில் விஜயகாந்த் உருவம்; காய்கனி சிற்ப கலைஞர் அஞ்சலி
கோவை: மறைந்த விஜயகாந்த்உருவத்தை தர்பூசணி பழத்தில் அச்சு அசலாக செதுக்கிகாய் கனிசிற்ப கலைஞர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் என்பவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி, காய் கறி அலங்காரம் செய்யும் தொழில் செய்துவருகிறார். காய் கனிகளில் சிற்பங்கள் செதுக்குவதையும் பொழுது போக்காக கொண்டுள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவு அவரது ரசிகர்கள், கட்சி தொண்டர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தர்பூசணி பழத்தில் அவரது உருவத்தை செதுக்கி சந்தோஷ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.சந்தோஷிடம் கேட்டபோது, ஆகச்சிறந்த மனிதர்களில் விஜயகாந்த் ஒருவர். அரசியலில் அவரது துணிவான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 5.5 கிலோ தர்பூசணி பழத்தில், 3.5 மணி நேரம் அவரது உருவத்தை செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளேன், என்றார்.