உள்ளூர் செய்திகள்

படித்த பள்ளியை மறக்காதவர் இளம் வயதில் கபடி வீரர்

தேவகோட்டை: தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த் தான் படித்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தே பிரித்தோ உயர்நிலைப்பள்ளி குறித்து அடிக்கடி பேச தவறுவதில்லை.விஜயகாந்த்தை அவரது பெற்றோர் தேவகோட்டை தே பிரித்தோ உயர்நிலைப் பள்ளி ( தற்போது மேல்நிலைப் பள்ளி) விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர். 1966 - 68 இரண்டாண்டுகள் 8,9ம் வகுப்பு இங்கு படித்துள்ளார். ஆசிரியர் லாசர் என்பவரிடம் படித்ததை பெருமையாக கூறுவார். இடையில் விஜயகாந்த் படிப்பை முடிக்காமல் சென்று மீண்டும் திரும்பி வந்து தொடர்ந்துள்ளார்.நடிகரான பிறகு ஒரு பேட்டிகளில் தான் படித்த தே பிரித்தோ பள்ளி பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். சிவகங்கை மாவட்டத்தில் கட்சி மேடைகள் மட்டுமின்றி அனைத்து மேடைகளிலும் பேசும் போது நான் தேவகோட்டை தேபிரித்தோ பள்ளியில் படித்தவன் இப்பகுதியை பற்றி நன்கு தெரியும் என குறிப்பிட தவறுவது இல்லை. 2001ம் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.ஒரு லட்சத்திற்கான செக்கை அப்போதைய தலைமையாசிரியர் அந்தோணி ஆரோக்கியத்திடம் வழங்கினார்.விஜயகாந்த் படித்த காலத்தில் விடுதியில் தங்கி படித்த ஜூனியரான பா.ஜ., நிர்வாகி காரைக்குடி மெய்யப்பன் கூறுகையில், விடுதியில் இருந்த போது ஒரு மாணவனுக்கு ஒன்று என்றால் அச்சமின்றி முன்னின்று குரல் கொடுப்பார். அவர் கபடி விளையாட்டு வீரர். வட்டு எறிதல் போட்டியிலும் ஆர்வமுள்ளவர். அவர் படித்த போது தான் பள்ளியில் ஒரு பிரச்னைக்காக ஸ்டிரைக் நடந்தது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்