புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு அரசு கலை கல்லூரியில் கருத்தரங்கம்
தர்மபுரி: புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில், பீடி, சிகரெட்டுக்கு அதிக வரி உயர்த்த வேண்டும் என, கல்லுாரி மாணவ, மாணவியர், பிரதமருக்கு கடிதம் அனுப்பினர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில், சீட்ஸ் தொண்டு நிறுவனம், சி.ஆர்.டி.எஸ்., தொண்டு நிறுவனம், நவஜீவன் அறக்கட்டளை, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியின் சமூகவியல் துறை இணைந்து, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்றார்.நவஜீவன் அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன் புகையிலை பாதிப்பால் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கினார். சி.ஆர்.டி.எஸ்., தொண்டு நிறுவன இயக்குனர் சிவகுமார் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சிகரெட் மற்றும் பீடி குடிப்பதால், அருகில் உள்ளவர்களுக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது என தெரிவித்தார்.நிகழ்ச்சியில், அரசு கலைக்கல்லுாரி சமூகவியல் பேராசிரியை தீபிகா, கடைகளில் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை விற்க தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார். கருத்தரங்கில், கலந்து கொண்ட அனைவரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சருக்கு, பீடி, சிகரெட், உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு, அதிக வரி விதிக்க வேண்டுமென கடிதம் அனுப்பினர்.இதில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர், கலந்து கொண்டனர்.