அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து
செங்கல்பட்டு: விஜயவாடாவில் நடக்கும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ள அரசு பள்ளி மாணவர்கள், கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.செங்கல்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்து, மாநில அளவில், கோவளம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் முசமில், ஆகாஷ், கரும்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி லக் ஷிதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.இவர்கள் மூவரும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், தென்னிந்திய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள் மூவரும், கலெக்டர் ராகுல்நாத்திடம் நேற்று முன்தினம் வாழ்த்து பெற்றனர்.முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.