காலநிலை மாற்ற மன்றம்: உபதலை அரசு பள்ளியில் துவக்கம்
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக, காலநிலை மாற்ற மன்றம் உபதலை அரசு மேல்நிலை பள்ளியில் துவங்கப்பட்டது.நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக, காலநிலை ஒருங்கிணைப்பாளர் சுவாதி துவக்கி வைத்து பேசினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் (பொ) மேகலா தலைமை வகித்தார்.ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுரு, குமார் செய்திருந்தனர்.மன்றத்தின் மூலம், காலநிலை மாற்றம் குறித்த விபரங்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இயற்கை விவசாயம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.