உள்ளூர் செய்திகள்

கே.வி., பள்ளிகளில் அட்மிஷன்; ஆன்லைன் பதிவு துவக்கம்

சென்னை: நாடு முழுதும் உள்ள கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கே.வி.சங்கதன் அமைப்பின் கீழ், நாடு முழுதும், 1,249 கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.இந்த பள்ளிகளில், மத்திய, மாநில அரசு பணியாளர்கள், ராணுவ வீரர்கள், மத்திய, மாநில பொது துறை நிறுவன பணியாளர்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மீத இடங்கள் இருந்தால், பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட துாரத்துக்குள் வசிக்கும் பொதுமக்களின் பிள்ளைகள் சேர்க்கப்படுவர்.வரும் 2024 - 25ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, கே.வி.சங்கதன் அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்புக்கு மட்டும், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கே.வி.சங்கதன் அமைப்பின், https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில், நேற்று முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இந்த ஆண்டு மார்ச் 31ல், 6 வயதை எட்டியிருக்க வேண்டும்; 8 வயது முடிந்திருக்கக் கூடாது. அதாவது, 2016 ஏப்., 1 முதல் 2018 ஏப்., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். கே.வி., மாணவர் சேர்க்கை முறை, நிபந்தனைகள் ஆகியவை குறித்த தகவல்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்