உள்ளூர் செய்திகள்

இயற்பியல், கணிதம், வேதியியல் படிப்புகளுக்கு ஆர்வம் குறைவில்லை!

மதுரை: மதுரையில் கல்லுாரிகளில் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் (காமர்ஸ்), ஏ.ஐ., உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு இந்தாண்டு ஆர்வம் அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் அரசு கல்லுாரிகளில் 3425 இடங்களும், உதவிபெறும் கல்லுாரிகளில் 11,968 இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் (எஸ்.எப்.,) 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் உள்ளன. கலைப் பிரிவில் இந்தாண்டும் வழக்கமாக வணிகவியல் பாடம் மீது மாணவர்களுக்கு ஆர்வம் உள்ளது. பி.காம்., பி.காம்., (சி.ஏ.,) பி.பி.ஏ., பி.காம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), பி.காம்., (கார்ப்பரேட் செகரட்டரிஷிப்) உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் அதிக தேர்வு செய்து வருகின்றனர். இதையடுத்து பி.ஏ., ஆங்கிலம், பொருளியல் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.அறிவியல் பிரிவில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிப்புகளுக்கு அதிக 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. சில உதவிபெறும் கல்லுாரிகளில் இந்தாண்டு பி.எஸ்.சி., ஏ.ஐ. அண்ட் எம்.எல்., டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பாடப் பிரிவுகளுக்கும் இந்தாண்டு அதிக போட்டி ஏற்பட்டுள்ளது. இப்பிரிவுகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.இயற்பியல், கணிதம், வேதியியல் போன்ற படிப்புகளுக்கும் இந்தாண்டும் ஆர்வம் குறையவில்லை. தாவரவியலுக்கு மட்டும் பல கல்லுாரிகளில் 'டல்' அடிக்கின்றன. இப்பாடத்திற்கு குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளன. அதேநேரம் அனிமேஷன், விஷூவல் கம்யூனிகேஷன் பிரிவுகளில் எந்த மாற்றமில்லை சில கல்லுாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.கல்லுாரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது: மாணவர்கள் சேர்க்கையில் வழக்கமான சூழல் தான் காணப்படுகிறது. அரசு கல்லுாரிகளுக்கு மே 28 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. மே 10 முதல் தான் பொது கலந்தாய்வு துவங்குகிறது. ஆனால் முன்னணி உதவிபெறும் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஏ.ஐ., மற்றும் எம்.எல்., படிப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வணிகவியல் படிப்புகளுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. பேஷன் டிசைன்' படிப்புக்கு இந்தாண்டு எதிர்பாராத வகையில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்