உள்ளூர் செய்திகள்

விண்வெளியில் உற்சாக நடனம் ஆடிய சுனிதா வில்லியம்ஸ்

ஹூஸ்டன்: மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்த சுனிதா வில்லியம்ஸ் அங்கு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், 58 மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், 61, .ஆகியோர் முதல் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தனர். இவர்களின் பயணம் கடந்த மே 07-ம் தேதி, மற்றும் கடந்த ஜூன் 01-ம் தேதி ஆகிய இரு முறை ஒத்திவைக்கப்பட்து.மீண்டும் கடந்த கடந்த 5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு ஜூன் 6ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்..இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்ததை சுனிதா வில்லியம்ஸ் உற்சாக நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்