உள்ளூர் செய்திகள்

என்டிஏ.,வில் சீர்திருத்தம்: கருத்து கேட்கிறது மத்திய அரசு குழு

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு புகாரை தொடர்ந்து அதனை நடத்தும் தேசிய தேர்வு முகமையை( என்டிஏ) மறுசீரமைப்பது அல்லது அதனை சீரமைப்பது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசு அமைத்துள்ள குழு கூறியுள்ளது.நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடியை தொடர்ந்து அந்த என்டிஏ.,வை சீரமைப்பது குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த குழுவினர், அந்த அமைப்பில் சீர்திருத்தம் செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது ஆலோசனை, கருத்துகளை தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளது. இதற்காக இணையதள முகவரியை வெளியிட்டுள்ள அந்தக்குழு() ஜூலை 7 வரை கருத்து தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்