உள்ளூர் செய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் பள்ளிகளில் காலஅட்டவணை தயாரிப்பு

பொள்ளாச்சி: உயர் தொழில்நுட்ப ஆய்வகம் கொண்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அனைத்து வகுப்பு மாணவர்களும், ஸ்மார்ட் கிளாஸ் பாடப்பிரிவில் பங்கேற்க கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை உள்ளடக்கிய அரசு பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ைஹடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ெஹப்ரான் நிறுவனம் வாயிலாக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், கல்வி உதவித் தொகை சார்ந்த பதிவுகள், மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விபரங்களை, ஆசிரியர்கள் உதவியுடன் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குவதுடன், ஆன்லைன் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி, அனைத்து வகுப்பு மாணவர்களும் 'ஸ்மார்ட் கிளாஸ்' பாடப்பிரிவில் பங்கேற்கும் வகையில், காலஅட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் அனைவரும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை தினமும் பயன்படுத்த வேண்டும். அதன்படி, ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும், தினமும், 45 நிமிடம் புரொஜக்டர் வாயிலாக ஸ்மார்ட் கிளாஸ் பாடப்பிரிவைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.ஆய்வக பணியாளர்கள், ஒன்றிரண்டு பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, இத்தகைய பணியில் ஈடுபடுவர். இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளிலும் காலஅட்டவணை தயாரிக்கப்பட்டு, தினமும் ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்