உள்ளூர் செய்திகள்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் ஜப்பான் அதிகாரி ஆய்வு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் நாட்டு ஜெய்க்கா திட்ட கடனுதவியில் சமீபத்தில் கட்டப்பட்ட ஆறு மாடி அறுவை சிகிச்சை அரங்கம் செயல்படும் விதத்தை ஜெய்க்கா திட்ட முதுநிலை மேம்பாட்டு அலுவலர் அதிதி பூரி ஆய்வு செய்தார்.ஜெய்க்கா திட்ட முகமையின் கடனுதவி மூலம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.321 கோடி மதிப்பீட்டில் ஆறுமாடி அறுவை சிகிச்சை அரங்க வளாகம் அமைக்கப்பட்டது. தற்போது முதல் மூன்று தளங்களில் நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிய வளாகம் செயல்படும் விதத்தை திட்ட முதுநிலை மேம்பாட்டு அலுவலர் அதிதி பூரி ஆய்வு செய்தார்.அவர் கூறுகையில், அறுவை சிகிச்சை அரங்குகளுக்கான தளங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆறாவது தளத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட உள்ள ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கு ஆக., இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.டீன் தர்மராஜ், மருத்துவ கண்காணிப்பாளர் குமாரவேல், ஆர்.எம்.ஓ., சரவணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஜெய்க்கா திட்ட நிர்வாகிகள், கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர். தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானத்தையும் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்