உள்ளூர் செய்திகள்

இலவச பள்ளி சீருடை வழங்குவதில் தி.மு.க., அரசு சுணக்கம்

சென்னை: பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் மாணவர்களுக்கான 4 செட் இலவச பள்ளி சீருடை வழங்கும் திட்டங்களில், தி.மு.க., அரசு சுணக்கம் காட்டுகிறது என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:பொங்கல் பண்டிகையின்போது பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவசமாக 4 செட் சீருடை வழங்கும் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் முழுமையாக செயல்படுத்தப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில், இலவச வேட்டி, சேலையை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கியதில்லை.இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு, 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 4 செட் வழங்கியதாக கணக்கு காட்டுவதாகவும், இதன் வாயிலாக இந்த ஆட்சியாளர்கள், அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு, 4 செட் சீருடைகளை உடனே வழங்க வேண்டும். வேட்டி, சேலையை பொது மக்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். வேட்டி, சேலை மற்றும் சீருடை நெய்வதற்கான வேலைகளை, தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்