டில்லி சுதந்திர தின விழாவில் சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு
திருப்பூர்: டில்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ், என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில், டில்லியில், நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க, மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.இம்முகாமில், தமிழகத்தில் இருந்து, 24 பேர் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பாரதியார் பல்கலை சார்பில், இரு மாணவர்கள், இரு மாணவியர் உட்பட, நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் அலகு - 2 சார்பில், மாணவர் கோதண்டராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், விலங்கியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். திருப்பூரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர், இவர் ஒருவர் மட்டுமே.சுதந்திர தின விழாவில், பங்கேற்கும் மாணவர் கோதண்டராமனை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.