உள்ளூர் செய்திகள்

அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு ஆணைய பரிந்துரையை ஏற்கணும்!

சென்னை: தேசிய மருத்துவ ஆணைய பரிந்துரைப்படி, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களுக்கு இணையாக, தமிழக அரசு டாக்டர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு கோரிக்கை வைத்து உள்ளது.இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை விபரங்களை, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் ஏப்ரலில் அறிவுறுத்தியது.இதைத் தொடர்ந்து, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை, ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், சுகாதார துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. டாக்டர்கள் பணிச்சுமை, குறைவான ஊதியம் உள்ளிட்டவற்றால் வேதனையுடன் பணியாற்றி வருகின்றனர்.ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற கோட்பாட்டின்படி, அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வழங்கப்படுவதை போல, அனைத்து பயிற்சி டாக்டர்கள், முதுநிலை டாக்டர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.இதுகுறித்து, டாக்டர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பரிந்துரையை அரசு ஏற்கவில்லை. தற்போது, தேசிய மருத்துவ ஆணையமும், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது.இந்த பரிந்துரையை ஏற்று, அரசு டாக்டர்களுக்கு, தமிழக அரசு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். குறிப்பாக, கருணாநிதி கொண்டு வந்த அரசாணை, 354ஐ செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்