வெராண்டா, வேலம்மாள் இணைந்து ஜூனியர் ஐ.ஏ.எஸ்., திட்டம் அறிமுகம்
சென்னை: வெராண்டா ஐ.ஏ.எஸ்., மற்றும் வேலம்மாள் போதி வளாகத்துடன் இணைந்து, ஜூனியர் ஐ.ஏ.எஸ்., திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - டி.என்.பி.எஸ்சி., போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்காக, வெராண்டா ஐ.ஏ.எஸ்., சார்பில், ஜூனியர் ஐ.ஏ.எஸ்., என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வாயிலாக, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.வேலம்மாள் போதி வளாகத்தில், ஆக. 23ம் தேதி நடந்த விழாவில், இதற்கான புரிந்தணர்வு ஒப்பந்தம் கையழுத்தானது.இந்த திட்டம், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்தவர்களால் வழிநடத்தப்படுகிறது.தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆய்வு குறித்த புத்தங்கள், வீடியோ விரிவுரைகள், நிபுணர்களின் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்குவது உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன.விழாவில், வெராண்டா ஐ.ஏ.எஸ்., தலைமை நிர்வாக அதிகாரி பரத் சீமான் பேசுகையில், 'வேலம்மாள் போதி வளாகத்துடன் இணைந்து, ஜூனியர் ஐ.ஏ.எஸ்., திட்டத்தை துவங்குவதில் மகிழச்சி அடைகிறோம்.நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும், நல்ல இளம் தலைவர்களை வளர்ப்பதே எங்கள் லட்சியம் என்றார்.