உள்ளூர் செய்திகள்

மோதல் வீடியோ வைரல் சம்பவம் மாணவர்களுக்கு போலீசார் அட்வைஸ்

திருக்கனுார்: மாணவர்கள் சாலையில் சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ வைரலாகிய நிலையில், காட்டேரிக்குப்பம் போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.புதுச்சேரி அருகே பள்ளி சீருடையில் மாணவர்கள் ரவுடிகளை போன்று சாலையின் நடுவே தாக்கி கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் லுார்து நாதன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன், தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லிங்காரெட்டிப்பாளையத்தில் பள்ளி மாணவர்களிடையே நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதில், மாணவர்கள் தங்களுள் ஏற்படும் பிரச்னைக்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்து, அதனை சரி செய்து கொள்ள வேண்டும். ரவுடிகளை போன்று சாலைகளில் சண்டை போடக்கூடாது. மாணவர்கள் ஒற்றுமையாக இருந்து சமுதாயத்தில் நடக்கும் குறைகளை சுட்டிக்காட்டும் துாண்களாக விளங்க வேண்டும்.ஒவ்வொரு மாணவர்களும், குறிக்கோளோடு செயல்பாட்டு, நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நல்ல ஒழுக்கத்துடன் பெற்றோர்களின் வார்த்தைகளை கேட்டு மதித்து நடக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்