உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி நிர்வாகத்தை அறிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வம்

அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில், கல்லூரி மாணவ, மாணவியர் நிர்வாகம் மற்றும் களப்பணிகளை பார்வையிட்டனர்.அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, லைசன்ஸ் கட்டணம் என ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வரி வருவாய் உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு பணிகள் நடைபெறுகின்றன.பேரூராட்சியின் நிர்வாக நடைமுறை மற்றும் களப்பணிகள் குறித்து தெரிந்து கொள்ள சரவணம்பட்டி, குமரகுரு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் 50 பேர் ஒரு நாள் பயணமாக நேற்று வந்தனர்.அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் பேரூராட்சி செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், பேரூராட்சியில், தினமும் 10 டன் குப்பை சேகரிக்கப்படுவது, அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்து விவரித்தார்.துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர், குளக்கரையில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா, நடைபாதை, அல்லிகுளம் குளத்தில் தூர்வாரும் பணி, வார சந்தையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்