உள்ளூர் செய்திகள்

தேசிய புத்தக கண்காட்சியில் இயக்குனருக்கு விருது வழங்கல்

புதுச்சேரி : தேசிய புத்தக கண்காட்சியில், கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு, புத்தக சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் 28வது, தேசிய புத்தக கண்காட்சி கடந்த 13ம் தேதி துவங்கியது. இதில் 1 லட்சத்திற்கு, மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. விழாவில், சிறப்பு தலைவர் பாஞ்ராமலிங்கம் வரவேற்றார். கலைப் பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாளுக்கு, புத்தக சேவா ரத்னா விருதை, முன்னாள் வணிகவரி ஆணையர் ராமதாஸ் வழங்கி கவுரவித்தார்.விருது பெற்ற இயக்குனர் பேசுகையில், புதுச்சேரியில் உள்ள நுாலகங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். ஏற்கனவே ரோமன் ரோலண்ட் நுாலத்தில் 4 லட்சம் நுால்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. கிளை நுாலங்களில் டிஜிட்டல் மயமாக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. விரைவில், நுாலக அலுவலர்கள் நியமனம் செய்ய உள்ளனர்.மொழியியல் பண்பாட்டு மையத்தில் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்