உள்ளூர் செய்திகள்

ரயில்வே லோகோ பைலட் தேர்வு; தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு

ஐதராபாத்: இறுதி கட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறால், ரயில்வே லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.ரயில்வே தேர்வு வாரியத்தால், லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான சி.பி.டி., தேர்வு, நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. தமிழக தேர்வர்களுக்கு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. அதை மாற்ற கோரிக்கைகள் விடப்பட்டன. ஆனால், தேர்வு மையங்களை, உடனடியாக தமிழகத்தில் வழங்க முடியாது என, ரயில்வே மறுத்து விட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் நடப்பதாக இருந்த தேர்வு, தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக, ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்தது. தேர்வர்களுக்கு இந்த தகவல், தேர்வு மையங்களுக்கு சென்ற பின்னரே கிடைத்தது. இதனால், தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.தேர்வர்கள் செலவு செய்த தொகையை, இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும், அறிவிக்கப்பட உள்ள தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்க வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்