உள்ளூர் செய்திகள்

எல்ஜி எக்யூப்மென்ட்சின் புதிய கல்வி உதவி திட்டம்

கோவை: ஏர் கம்ப்ரெஸ்ஸர் துறையில், உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், அமிர்தா பல்கலையோடு இணைந்து மாணவர்களின் பொறியியல் உயர்கல்விக்காக, கேட்டலிஸ்ட் என்ற கல்வி உதவி திட்டத்தை துவக்கியுள்ளது.பொருளாதார நிலையில் பின் தங்கியிருந்தும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் பொறியியல் உயர்கல்விக்காக, இந்த திட்டம் துவங்கப்படவுள்ளது.எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ஜெயராம் வரதராஜ் பேசுகையில், இந்த திட்டம் மூலம் வரும் 2025-26 கல்வி ஆண்டிலேயே, 20 திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தரமான பி.டெக்.,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு வழங்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கவும் இந்த திட்டம் வழிசெய்துள்ளது, என்றார்.கோவை அம்ரிதா பல்கலையில் பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயில விரும்பும் மாணவர்களுக்கு, பிரத்யேகமாக இந்த திட்டம் உதவும். மேலும் தகவல்களை, https://www.elgi.com/in/catalyst/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இத்தகவலை, அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை உறவுகள் பிரிவின் முதன்மை இயக்குனர் பேராசிரியர் பரமேஸ்வரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்