உள்ளூர் செய்திகள்

வி.ஜி., மருத்துவமனை டாக்டருக்கு கிடைத்தது சர்வதேச அங்கீகாரம்

கோவை: உலகப் புகழ்பெற்ற மருத்துவப் பல்கலையான, ராயல் அறுவை சிகிச்சை கல்லுாரி சார்பில், வி.ஜி., மருத்துவமனையின் டாக்டர் வெங்கடேஷூக்கு, 'ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் பெல்லொஷிப்' அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை துறையில் சாதனை மற்றும் 1997ம் ஆண்டு முதல், உலகளவில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு, லேப்ராஸ்கோப்பி கற்பிப்பதில், அவர் காட்டிய சிறந்த அர்ப்பணிப்புக்காக, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.1994ம் ஆண்டு முதல் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து வரும் டாக்டர் வெங்கடேஷ், அதி நவீன 3டி கருவி மூலம், ஆயிரக்கணக்கான லேப்ராஸ்கோப்பி மற்றும் பொதுநல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.மேட்டுப்பாளையம் ரோட்டில் செயல்படும், வி.ஜி., மருத்துவமனை 1955ம் ஆண்டு டாக்டர் வேணுகோபால கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு இன்று, உலகளவில் 3டி லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளிலும், பயிற்சி பெறுவதிலும் பிரபலமாக விளங்குகிறது.நுாறு படுக்கை வசதி களை கொண்டு, 24 மணி நேரமும் செயல்படும் இம்மருத்துவமனையில், அனைத்து அதிநவீன வசதிகளும், மருத்துவ காப்பீட்டு திட்டங்களுடன் உள்ளதாக, டாக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்