உள்ளூர் செய்திகள்

தானியங்கி வாகன தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி புதிய முயற்சி

சென்னை: சென்னை ஐஐடி அமைத்துள்ள நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சி மையம், அக்செஞ்சர் நிறுவனத்துடன் இணைந்து வாகன தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்செஞ்சரின் லேர்ன்வான்டேஜ் அகாடமி மூலம், மென்பொருள் சார்ந்த வாகன உற்பத்திக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, இன்போடெயின்மென்ட் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.இந்த முயற்சி, ஆட்டோமோடிவ் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான திறன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சுயவேகக் கற்றல், கலந்துரையாடும் அமர்வுகள் மற்றும் ஐஐடி பயிற்றுவிப்பாளர்கள் வழிகாட்டும் வகுப்புகள் என்பன இதில் இடம் பெறுகின்றன.2040க்குள் மென்பொருள் சார்ந்த வாகன சேவை சந்தை 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என அக்செஞ்சர் மதிப்பீடு செய்துள்ளது.இந்த ஒத்துழைப்பு குறித்துப் பேசிய அக்செஞ்சரின் லேர்ன்வான்டேஜ் உலகளாவிய தலைவர், வாகனங்கள் அதிநவீன மென்பொருள்-சார்ந்த இயந்திரங்களுக்கு மாறும்போது, ​​வாகனத் துறைக்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் திறமையான டிஜிட்டல்முறை சார்ந்த திறமையாளர்கள் தேவைப்படுகின்றனர். ஐஐடி மெட்ராஸ் உடனான தங்களது ஒத்துழைப்பு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும், என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்