முதுகலை பட்ட படிப்பு விண்ணப்பம் திருத்தி கொள்ள அனுமதி
புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் விண்ணப்பித்தவர்களின் விபரங்களில் திருத்தம் இருந்தால், வரும் 4ம் தேதிக்குள் திருத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை பட்ட மேற்படிப்பு இயக்குனர் கோச்சடை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதுகலை பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்த, விண்ணப்பதாரர்களின் விபரங்கள், வெப் சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், எம்.ஏ., தமிழ், பிரெஞ்சு எம்.எஸ்சி., கணினியியல், புள்ளியியல், மனையியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள், விபரங்களில் திருத்தம் இருந்தால், வரும் 4ம் தேதிக்குள், இந்நிறுவனத்தை அணுகி திருத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.