உள்ளூர் செய்திகள்

கேரளாவில் கல்வி பயில வெளிநாட்டு மாணவர்கள் வருகை அதிகரிப்பு

மூணாறு: கேரளா பல்கலைகளில் கல்வி பயில வரும் வெளிநாடுகளின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வெளிநாடுகளில் கல்வி பயில வேண்டும் என நமது நாட்டினர் இடையே மோகம் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரள மாநில பல்கலைகளில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி உள்பட பட்ட படிப்பு பயில வருகை தரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த 2021 முதல் 2025 வரை 4 ஆண்டுகளில் அமெரிக்காவை சேர்ந்த 5 மாணவர்கள் உள்பட 768 மாணவ, மாணவிகள் கல்வி பயில வருகை தந்ததாக உயர் கல்வித்துறை கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. அதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளைச் சேர்ந்த 55 மாணவர்கள் சிறப்பு திட்டங்கள் மூலம் படிக்கின்றனர்.நடப்பு (2025 - 2026) கல்வியாண்டில் கனடா, கொலம்பியா, அங்கோலா, ஈரான், ஈராக், ஜார்ஜியா உள்பட 55 நாடுகளைச் சேர்ந்த 98 பேர் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 371 மாணவர்கள் கேரளா பல்கலையில் படிக்கின்றனர்.அடுத்த படியாக எம்.ஜி. பல்கலையில் 203, கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலையில் 56, கோழிக்கோடு பல்கலையில் 36 மாணவர்கள் படிக்கின்றனர். கேரள மாநிலம் உயர் கல்வி துறையில் சர்வதேச தரத்தை எட்டியுள்ளது என மாநில கல்வித்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்