கொடைக்கானல் பல்கலை பட்டமளிப்பு விழா:கவர்னர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பங்கேற்ற நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் புறக்கணித்தார்.இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் கலா வரவேற்றார். ஒடிசா பெர்ஹாம்பூர் பல்கலை துணை வேந்தர் கீதாஞ்சலி தாஸ் கலந்து கொண்டார். 8486 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 376 பேருக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். 19 மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டன. உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் விழாவை புறக்கணித்தார்.பல்கலை பதிவாளர் ஜெயப்ரியா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி, பெற்றோர் கலந்து கொண்டனர். ஒடிசா பல்கலை துணை வேந்தார் கீதாஞ்சலி தாஸ் பேசுகையில் ''கல்வி மாற்றத்திற்கான மிக சக்தி வாய்ந்த கருவி. எல்லாவற்றிற்கும் மேலாக தொழில் நம்பிக்கைகள், சமூகத்திற்கு நமது பங்களிப்பை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கல்வி வழங்குகிறது. வாழ்க்கையில் ஆர்வம் கொள்ளுங்கள். மீள் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உண்மையான தலைமை பண்பு மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவது அல்ல'' என்றார்.