உள்ளூர் செய்திகள்

ஆகாஷ் கல்வி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை: ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில், ஐஓக்யூஎம் மற்றும் அன்தே 2025 தேர்வுகளில் தேசிய அளவில் சிறப்பாக சாதனை படைத்த மாணவர்களுக்கு சென்னை நகரில் பாராட்டு விழா நடைபெற்றது.ஐஓக்யூஎம் தேர்வில் பங்கேற்ற அனைத்து 32 மாணவர்களும் அடுத்த கட்டமான ஆர்எம்ஓ தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், சென்னைவடக்கு கிளையை சேர்ந்த சூர்யகிருஷ்ணன் அதிகபட்சமான 56 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும் கௌஷிக், தகுதி மதிப்பெண்ணை விட 22 மதிப்பெண்கள் அதிகமாக பெற்று திறமை வெளிப்படுத்தியுள்ளார்.அன்தே 2025 தேர்வில், சென்னை, ஆவடி கிளையை சேர்ந்த பிரத்யூஷ் 100% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ.1.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.ஏஇஎஸ்எல் கல்வித் தலைவர் தீரஜ் குமார் மிஸ்ரா பேசுகையில், “100% ஆர்எம்ஓ தகுதியும், உயர்ந்த மதிப்பெண்களும் மாணவர்களின் முயற்சிக்கும் மற்றும் எங்கள் பயிற்சிக்கும் பெருமை சேர்க்கும்” என்று தெரிவித்தார்.விழாவில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்