உள்ளூர் செய்திகள்

சென்னை தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம்; மாணவருக்கு ரூ.38,000 இழப்பீடு வழங்க உத்தரவு

நாமக்கல்: சென்னை தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், மாணவருக்கு, 38,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியை சேர்ந்த பழனியப்பன் மகன் தினேஷ், 24. இவர், 2023 ஜூனில், சென்னையில் உள்ள, சி.ஏ.டி., பாயிண்ட் ஓயாசிஸ் டெக்னாலஜி அண்டு கன்சல்டிங் சர்வீஸஸ் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்தில், குறுகிய கால கம்ப்யூட்டர் படிப்புக்கு, 26,000 ரூபாய் செலுத்தியுள்ளார். இரண்டு வாரங்கள் மட்டுமே பயிற்சி வகுப்பு நடத்திய நிறுவனம், அதன்பின் பயிற்சியை நிறுத்தியது.இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் தினேஷ், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், கடந்த மே மாதம், சென்னை தனியார் பயிற்சி நிறுவனம் மீது வழக்கு தொடுத்தார். விசாரணை முடிந்து, நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர். அதில், பயிற்சி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்துள்ளதால், மாணவர் செலுத்திய, 26,000 ரூபாய், அவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக, 12,000 ரூபாய் என, மொத்தம், 38,000 ரூபாயை, ஒரு மாதத்துக்குள் மாணவருக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்