உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு விண்ணப்பங்கள்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சார்பில் துவக்கப்பட்டுள்ள இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மூலமாக துவங்கப்பட்டுள்ள கல்வி நிலையம் சார்பில், பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இந்த கல்வி நிலையத்தில், இளங்கலை தொழிலாளர்கள் மேலாண்மை(பி.ஏ.), முதுநிலை தொழிலாளர்கள் மேலாண்மை (எம்.ஏ.), தொழிலாளர்கள் நிர்வாகத்தின் முதுநிலை மாலை நேர டிப்ளமோ (பி.ஜி.டி.எல்.ஏ.) ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன. பட்டப் படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்களும், இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் முதுகலை பாடப் பிரிவுகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை இயக்குனர், தமிழ்நாடு தொழிலாளார் கல்வி நிலையம், எண் 5, காமராஜர் சாலை, சென்னை என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர்கள் ஆய்வாளர் விமலநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்