உள்ளூர் செய்திகள்

அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

காரைக்குடி: அழகப்பா பல்கலை, இணைப்பு கல்லூரிகளில் ஏப்., 2011ல் நடந்த பருவ தேர்வு மற்றும் தொலை முறைக்கல்வி தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பி.காம்., பி.காம் (மாலை நேர கல்லூரி), பி.காம் (சி.ஏ.,) , பி.காம் (கார்ப்பரேட் செகரட்டரிஷிப்), பி.பி.இ., மற்றும் பி.ஏ., சுற்றுலா மேலாண்மை) பருவ தேர்வு முடிவுகள் மற்றும் தொலைமுறை கல்வி தேர்வு முடிவுகள் (பி.பி.எம்., பி.சி.எஸ்., எம்.காம் (மார்க்கெட்டிங்), எம்.சி.எஸ்., எம்.எஸ்(எஜூகேஷன் மேனேஜ்மென்ட்), எம்.பி.ஏ.,(இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்), எம்.பி.ஏ.,(ஷிப்பிங் மற்றும் போர்ட் மேனேஜ்மென்ட், முதுநிலை டிப்ளமோ லேன்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை மாணவர்கள் "www.kalvimalar.com&'&' மற்றும் "www.alagappauniversity.com.in&'&' என்ற வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம். முடிவு வெளியான 10 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பல்கலை இணையதளம் மற்றும் கல்லூரிகளில் பெறலாம். விண்ணப்பத்துடன், இணைப்பு கல்லூரி மாணவர்கள் மறு மதிப்பீட்டு கட்டணமாக 225 ரூபாய் டி.டி., எடுத்தும், தொலைமுறை கல்வி மாணவர்கள் 400 ரூபாய் டி.டி. எடுத்தும் பல்கலை தேர்வு பிரிவிற்கு அனுப்புமாறு, தேர்வாணையர் மாணிக்கவாசகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்