பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி
கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில், 10 மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மனிதவள மேம்பாட்டு பயிற்சி, கோவையில் அளிக்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மனித வள மேம்பாட்டு பயிற்சி, கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இந்த பயிற்சியை ஐ.என்.ஜி., அமைப்பின் நிதியுதவியுடன், ‘யுனிசெப்’ அமைப்பு நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்பில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) கார்மேகம், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சேதுராமவர்மா, எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி, கோவை கல்வி மாவட்ட அதிகாரி கலைவாணி ஆகியோர் பங்கேற்றனர். ஐ.என்.ஜி., அமைப்பின் பயிற்சியாளர்கள் ரால்ப், அலிஷன் ஹிஸ்காக்ஸ் ஆகியோர் 40 தலைமை ஆசிரியர்களுக்கு நேர மேலாண்மை, தொடர்பியல் திறன் பயிற்சி அளித்தனர்.