உள்ளூர் செய்திகள்

பிரச்னைகளை கண்டு பயப்படக்கூடாது : கலாம் அறிவுரை

தூத்துக்குடியில், நேற்று சுப்பையா வித்யாலயம் பள்ளியில், மாணவ, மாணவிகளிடையே அவர் பேசியதாவது: இந்த உலகில் பிறந்த அனைவருக்கும், வரலாற்றின் பக்கங்களில், ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பக்கத்தை, இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. இந்த உலகம் இரவும், பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில், உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. "அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன்" என்று, நீங்கள் நினைத்த அடுத்த வினாடி, வரலாற்றில் உங்கள் பக்கம் எழுத்தபட, நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். எனவே, நீ நீயாக இரு. ஒரு மரம், 20 கிலோ கிராம் கார்பன்-டை-ஆக்சைடை, ஒரு ஆண்டிற்கு உள்வாங்கி அழிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில், 10 மரங்களை நட்டு, அதைப் பாதுகாத்தால், 10 பில்லியன் மரங்களை நாம் நடுவோம் என்ற இலக்கை அடைந்து, இந்தியாவின் மாறிவரும் தட்டவெப்ப சூழ்நிலையை சமாளிக்கலாம். பறக்கும் நாட்களை, பறந்துகொண்டிருக்கும் நாட்களை, வாழ்க்கைக்கு பயன்படுமாறு உபயோகிப்போம். பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் அவற்றைத் தோல்வியடையச் செய்ய வேண்டும். நல்லொழுக்கம் வேண்டும். இவை இருந்தால், எல்லோருக்கும் என்றும் வெற்றிதான். இவ்வாறு, கலாம் பேசினார். கலெக்டர் ஆஷிஷ் குமார், சப்-கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பரிமளா, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்