உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி கட்டணத்தை மேலும் உயர்த்த கோரிக்கை

சங்கத்தின் நிறுவன தலைவர் அரசகுமார், மாநில தலைவர் ராஜன் ஆகியோர், தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுத் தலைவருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முந்தைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட கட்டண நிர்ணய குழுத் தலைவர்கள், தனியார் பள்ளிகள் தரப்பில் கொடுக்கப்பட்ட வரவு - செலவு கணக்குகளை சரிவர ஆய்வு செய்யாமல், பள்ளிகளின் தரத்தை, ஏ, பி, சி, டி என, தவறான முறையில் தரம் பிரித்து, கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்தனர். இதனால், எங்களது சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை கருத்தில்கொண்டு, இந்த பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் நிர்ணயம் என்ற வரையறையை நீக்கி, ஆண்டிற்கு ஒரு முறை புதிய கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்