உள்ளூர் செய்திகள்

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்

சிவகங்கை : கிராமப்புற மாணவர்கள் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் பிரச்னை உள்ளதால், கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை. பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு அரசு ரூ.200 முதல் 500 வரை கல்விக்கட்டணமாக வழங்குகிறது. கலைக்கல்லூரி, மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தக கட்டணம், கல்லூரி, பயிற்சி, தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றிற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வில் 40 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவரின் பெற்றோர் ஒரு லட்சத்துக்கு மிகாமல் வருமானம் பெறுபவராக இருந்தால், இந்த தொகை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களின் மூலம் டி.டி., யாக வழங்கப்பட்டது. தற்போது இந்த உதவித்தொகையை மாணவர்களின் வங்கி கணக்கு மூலமே வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்க ஆவணங்கள் கேட்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தலா 2 கோடி ரூபாய் வரை அரசு வழங்கிய பணத்தில், கிராமப்புற மாணவர்கள் 90 சதவீதம் பேர் கணக்கு துவங்காததால், கல்வி உதவி தொகை பெற முடியவில்லை. நகர் புறங்களில் வசிக்கும் மாணவர்கள் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் சிரமம் இல்லை. கிராமப்புற மாணவர்களிடம் ஆவணங்கள் கேட்பதால், கணக்கு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்