உள்ளூர் செய்திகள்

கேம்பஸ் இன்டர்வியூ: விளக்கம் கேட்கிறது அண்ணா பல்கலை.

இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது குறித்து தனியார் கல்லூரிகள் தவறான தகவல்களை அளித்து மாணவர்களை தங்களது கல்லூரிகளுக்கு ஈர்க்க முயல்வதாக புகார்கள் எழுந்துள்லன. இதையடுத்து கேம்பஸ் இன்டர்வியூ விவரங்களை அளிக்கும்படி அண்ண் பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது என்று துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். எந்தப் பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு தேர்ச்சி விகிதம் என்பது குறித்த விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்