உள்ளூர் செய்திகள்

ஸ்டெல்லா மேரி கல்லூரிக்கு ஏ கிரேடு அங்கீகாரம்

தற்போதையத் தர முறைப்படி 4-க்கு 3.57 கிரேடிங் பெற்று ஏ கிரேடு பெற்றுள்ளது ஸ்டெல்லா மேரி கல்லூரி. நாக் அமைப்பிடமிருந்து இதுகுறித்த தகவல் கடந்த வாரம் கிடைத்தது. கல்லூரியின் உயர்ந்த கல்வித்தரமாக இத்தகைய உயர் தர அங்கீகாரம் கிடைப்பதற்குக் காரணம் என்கிறார் ஸ்டெல்லா மேரி கல்லூரி முதல்வர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தர அங்கீகாரம் செய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவினால் அமைக்கப்பட்ட அமைப்பு நாக் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அங்கீகாரம் வழங்கப்பட்டபோது அதிக பட்ச தரமுள்ள கல்வி நிறுவனத்திற்கு ஐந்து நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டது. அப்போதும் ஸ்டெல்லா மேரி கல்லூரி ஐந்து நட்சத்திர அங்கீகாரத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி,  சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்கஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி, ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளும் மறு தர நிர்ணயம் செய்யப்பட்டு ஏ கிரேடு வழங்கப்பட்டுள்ளன.  நாமக்கல்லில் உள்ள செல்வம் கலைக் கல்லூரிக்கும் ஏ கிரேடு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரண்டு பல்கலைக்கழகங்களும் 131 கல்லூரிகளும் முதன் முறையாக தற்போது தர அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளன. 6 பல்கலைக்கழகங்களும் 17 கல்லூரிகளும் மறுபடியும் தர அங்கீகாரம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ஏழு கல்லூரிகளுக்கு மறு தர அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. 8 கல்லூரிகள் புதிதாக தர அங்கீகாரம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்