உள்ளூர் செய்திகள்

மரக்கட்டையால் ஆசிரியர் அடித்ததால் மாணவர் தலையில் காயம்!

சென்னை குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்த கோகுலன் (14) தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். வீட்டுப் பாடம் செய்யாத மாணவர்களை அறிவியல் ஆசிரியர் லிங்கதுரை அடித்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் அடித்தபோது கோகுலன் தலையில் அடி விழுந்து, மண்டை உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் கோகுலனை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனக்கு அழைத்து சென்று தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 4 தையல் போட்டுள்ளனர். பின்னர் கோகுலனை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தனர். வகுப்பறையில் மேஜை விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக வீட்டில் கூற வேண்டும் எனவும் கோகுலனை லிங்கதுரை லிங்கதுரை மிரட்டியதாகவும் தெரிகிறது. பள்ளியில் நடந்ததை வீட்டில் தனது தாயாரிடம் கோகுலன் கூறியிருக்கிறார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் கோகுலனின் தாயார் புகார் தெரிவித்தார். பின்னர் சேலையூர் காவல் நிலையத்திலும் ஆசிரியர் லிங்கதுரை மீது அவர் புகார் செய்துள்ளார். பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். தொடக்க கட்ட விசாரணையை அடுத்து, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி வி. ரமணா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்