மாணவரின் கேள்விகளுக்கு சி.பி.எஸ்.இ., இயக்குனர் ஆன்லைனில் பதில்!
www.cbse.nic.in என்ற வெப்சைட் வாயிலாக, பள்ளிகளின் அங்கீகாரம், கல்வி, தேர்வு முறை, நிர்வாகம், சி.பி.எஸ்.இ., மையங்கள் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு விளக்கம் பெறலாம். இதன்மூலம் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தங்களது ஆலோசனைகள், பிரச்சனைகளை நேரடியாக சி.பி.எஸ்.இ., இயக்குனரிடமே தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சி.பி.எஸ்.இ., மக்கள் தொடர்பு அதிகாரி ரமா சர்மா கூறுகையில், ‘வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்றும் வகையில் சி.பி.எஸ்.இ., இந்த வசதியை துவக்கியுள்ளது. பயனாளர்கள், தங்களது கேள்வியுடன் வீடியோ, ஆடியோ ஆவணங்களையும் இணைத்து அனுப்பமுடியும். கேட்கப்படும் சந்தேகளுக்கு 24 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க நாங்கள் முயற்சி செய்வோம்’ என்றார். சி.பி.எஸ்.இ., சிறந்த திட்டத்தை துவக்கியுள்ளது. இது வாரியத்தின் பொறுப்புணர்வையே உணர்த்துகிறது, என்று பள்ளி நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.