பொது அறிவுப்போட்டி: கோபி மாணவி மாநிலத்தில் முதலிடம்
கோபி: மாநில அளவிலான பொது அறிவுத் தேர்வில், கோபி கம்பன் கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி முதலிடம் பெற்றார். ஈரோடு ஜே.சி.ஐ., எக்ஸல் பதிப்பகம், வேதா அகாடமி சார்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொது அறிவு தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்ட அளவில் ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில், கோபி கம்பன் கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளி ப்ளஸ் 1 மாணவி நந்தினி பொது அறிவுத்தேர்வில் முதலிடம் பெற்றார். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன் பரிசு வழங்கினார். இணை இயக்குனர் முருகராஜ், சுப்பிரமணியம், ஜேசீஸ் திட்ட தலைவர் முருகானந்தம், கம்பன் கல்வி நிலைய தாளாளர் காளியண்ணன், செயலாளர் ஜானகி, முதல்வர் விசாலாட்சி ஆகியோர் பாராட்டினர்.