நெல்லையில் இன்று பல்கலை., செனட் உறுப்பினர் தேர்தல்
திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் தேர்தல் நெல்லையில் இன்று (26ம் தேதி) நடக்கிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் செனட் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் முதுகலை ஆசிரியர் சங்க பிரதிதிகளிடையான செனட் உறுப்பினர் தேர்தல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று (26ம் தேதி) காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள சுமார் 140 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஓட்டுப்பதிவில் பங்கேற்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.